20-20 உலககிண்ண இந்தியா அணியில் அஷ்வின், டோனி

இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 20-20 உலக கிண்ண தொடருக்கான இந்தியா அணியினை அறிவித்துளளது. இதில் ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் அணியில் சேர்க்கபப்ட்டுள்ளார். 4 வருடங்களுக்கு பின்னர் அஷ்வின் 20-20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அஷ்வின் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், விராத் கோலிக்கும் அஷ்வவினுக்குமிடையில் நல்லுறவில்லை என பேச்சுக்கள் உள்ள நிலையிலும் அஷ்வின் 20-20 அணிக்குள் மீள சேர்த்துக்கொள்ளப்பட்டது ஆச்சரியமே. மஹேந்திரா சிங் டோனியும் இந்த 20-20 உலககிண்ண இந்தியா அணியோடு இணைந்து கொள்கிறார். இம்முறை அவர் வீரராக அல்ல. ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். டோனி ஆலோசகராக இருப்பது அணிக்கு மனவளவில் நல்ல பலத்தை கொடுக்கும் என நம்பலாம்.
யுஸ்வேந்திரா சஹால், ஷிகர் தவான் போன்ற தொடர்ச்சியாக விளையாடி வந்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கபப்ட்டுள்ளனர்.

அணி விபரம்
விராத் கோலி, ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், இஷன் கிஷன், றிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ்,ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷார் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர்குமார், மொஹமட் ஷமி
மேலதிக வீரர்கள் – ஷ்ரயாஸ் ஐயர், சர்தூல் தாகூர், தீபக் ஷகர்

20-20 உலககிண்ண இந்தியா அணியில் அஷ்வின், டோனி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version