எலான் மாஸ்க்கிற்கு ரணில் நன்றி தெரிவிப்பு

இலங்கையில் செய்மதி இணைய சேவையினை ஆரம்பித்தமைக்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆரம்பம் நாட்டின் டிஜிட்டல் துறையில் ஒரு முக்கிய மைல்கள் என மேலும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எலான் மாஸ்க்கை மீண்டும் சந்தித்து இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் எதிர்பார்த்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு பயணம் ஒன்றின் போதே எலான் மாஸ்க்கை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின் பின்னரே இலங்கையில் எலான் மாஸ்க் செய்மதி இணைய சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தார்.

Social Share

Leave a Reply