இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அபாரம்

இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அபாரம்

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி ஓட்டங்களினால் அபார வெற்றியை பெற்றது. இரு அணிகளும் இடையிலான 3 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது.

245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 71 ஓட்டங்களை ரன்ஷிட் ஹசன், நஜ்முல் ஹசன் சாண்டோ ஆகியோர் பெற்றனர். பங்களாதேஷ் அணி வெற்றி பெறுவது என்ற நிலை ஏற்பட்ட போது, நஜ்முல் ஹசன் றன் அவுட் மூலமாக ஆட்டமிழக்க போட்டியின் போக்கு மாறியது. அதன் பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் கைவரிசையை காட்ட பங்களாதேஷ் அணி தடுமாறிப்போனது. 100 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்து 106 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் என்ற நிலை உருவானது. வனிந்து-கமிந்து ஜோடி இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்தனர்.
இலங்கையின் வெற்றி உறுதியானது.

பங்களாதேஷ் அணி ஓவர்களில் சகல விக்ட்களையும் இழந்து ஓட்டங்களைப் பெற்றது. ரன்ஷிட் ஹசன் 62 ஓட்டங்களையும், நஜ்முல் ஹசன் சாண்டோ 23 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேக்கர் அலி இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை குவித்தார். இருப்பினும் அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. இருந்தாலும் இலங்கை அணி மீது அழுத்தம் ஏற்பட்டது. அவர் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அசித்த பெர்னாண்டோ முதல் விக்கெட்டை கைப்பற்றினார். வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும், கமிந்து மென்டிஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். மஹீஸ் தீக்ஷண ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். வனிந்து ஹசரங்க ஒரு நாள்ப் போட்டிகளில் 100 விக்கெட்ளை கடந்துள்ளார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. ஆரம்பம் முதல் தடுமாறிய இலங்கை அணி குஷல் மென்டிஸ், சரித் அசலங்க ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் ஓரளவு மீண்டது. இருவரும் 60 ஓட்டங்களை நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். 29 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களும் வீழ்ந்தன. குஷல் மென்டிஸ் ஆட்டமிழந்ததை தொடர்ந்து சரித்-ஜனித் லியனகே ஜோடி 64 ஓட்டங்களையும் பகிர்ந்த நிலையில் ஜனித் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தனது முதற் போட்டியில் விளையாடிய மிலான் ரத்நயாக்க சரித் அலங்கவுக்கு கைகொடுத்து 39 ஓட்ட இணைப்பாட்டத்தைவழங்கினார். அவர் 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக 44 ஓட்டங்களை வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க ஜோடி பெற்றுக்கொண்டது. வனிந்து 22 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பத்தும் நிஸ்ஸங்க ஓட்டமின்றியும், நிஷான் மதுஷ்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கமிந்து மென்டிசும் ஓட்டமில்லாமல் ஆட்டமிழந்தார். துடுப்பாட வருகை தந்தது முதல் சரித் அசலங்க அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டினார். அவருடைய துடுப்பாட்டம் மூலமே இலங்கை அணி ஸ்திரமான நிலை ஒன்றுக்கு வந்தது. இறுதி வரை போராடிய அவர் ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது சரித் அசலங்கவின் ஐந்தாவது சதமாகும்.

49.1 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் 4 விக்ட்களை (10 ஓவர்கள் 47 ஓட்டங்கள்) கைப்பற்றினார். டன்ஷிம் ஹசன் சஹிப் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply