தோல்வியிலிருந்து தப்பிப் பிழைத்த பாகிஸ்தான்.

நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (07.02) T20 உலககிண்ணத்தின் முதலாவது போட்டியாக SSCயில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்கொட் எட்வர்ட்ஸ் 37(29) ஓட்டங்களையும், பஸ் டெ லீடா 30(25) ஓட்டங்களையும், மிச்செல் லெவிட் 24(15) ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சல்மான் மிர்ஸா 3 விக்கெட்களையும், மொஹமட் நவாஸ், அப்ரர் அஹ்மத், சைம் அயூப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

148 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக துடுப்பாடி வந்தது. சஹிப்சாதா பர்ஹானின் ஆட்டமிழப்புடன் பாகிஸ்தான் அணி தடுமாற தொடங்கியது. பஹீம் அஷ்ரபின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் சஹிப்சாதா பர்ஹான் 47(31) ஓட்டங்களையும், பஹீம் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 29(11) ஓட்டங்களையும் பெற்றனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் பவுல் வன் மீகரன், ஆர்யன் டட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், லோகன் வன் பீக், கைல் க்ளெய்ன், ரொலொப் வன் டே மெர்வ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

T20 உலகக்கிண்ணம் ஆரம்பம் – காணொளி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஈடன் கார்டான்சில் T20 உலககிண்ணத்தின் 2 ஆவது போட்டியாக ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version