ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டும் வெளிநாட்டு நபர்களை அடையாளம் காண நடவடிக்கை!

தென் மாகாணத்தில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் வெளிநாட்டு நபர்களை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

மேலும்,செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு மோட்டார் வாகனம், மூன்று சக்கர வண்டி அல்லது மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வாடகை, குத்தகை அல்லது ஏதேனும் பிற அடிப்படையில் வழங்குவது குற்றமாகும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டத்துக்கு முரணாக இவ்வாறான வாகனங்களை வழங்கும் வணிக நிறுவனர் அல்லது வாகன உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி காவல் அதிபர் எப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

இலங்கையை சுற்றுலா தலமாக தேர்வு செய்யும் வெளிநாடடவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2025ஆம் ஆண்டு இலங்கையில் வாகனம் ஓட்டியபோது வீதி விபத்துகளில் ஐந்து வெளிநாட்டு நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், வெளிநாட்டு நபர்கள் தொடர்புடைய ஏழு கடுமையான மோட்டார் விபத்துகளும், மேலும் 78 சிறிய விபத்துகள் மற்றும் ஆறு வாகன சேத சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன்,
ஓட்டுநர்களும் வாகன உரிமையாளர்களும் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை மீறியது இந்த விபத்துகளுக்கு காரணமாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version