‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்து – 7 பேர் பலி!

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு பயணித்த ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ‘ஏர் ஆம்புலன்ஸ்’ (Air Ambulance) விமானம், சத்ரா மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் நேற்று (02.24) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்திய விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு நெருக்கடி குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version