வெளிநாட்டவர்களுக்கு 7 நாள் விசா நீடிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் சூழ்நிலையால் பல நாடுகள் தங்களின் வான்வழிகளை மூடியுள்ளன. இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வரவும், அங்கிருந்து புறப்படவும் இருந்த 115 விமான சேவைகள் இன்று (02.02) இரவு 9.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரவிருந்த 55 விமானங்களும், அப்பகுதிக்குப் புறப்படவிருந்த 60 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 28ஆம் தேதி மத்திய கிழக்கு நோக்கி புறப்பட்ட FitsAir மற்றும் Air Arabia விமானங்கள் அப்பகுதிக்குள் செல்ல முடியாமல் மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்பியுள்ளன.

இதனிடையே, SriLankan Airlines விமானங்கள் எதுவும் வெளிநாடுகளில் சிக்கியில்லை என அதன் நிறுவனத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது இலங்கையில் தங்கியுள்ள மற்றும் விசா காலாவதியான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 7 நாட்கள் விசா நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version