ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் – ட்ரம்ப்

ஈரான் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கை அதிகபட்சம் நான்கு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பத்திரிகையான Daily Mailக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்,

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் தலைவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரானுடன் மேலதிக பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்ததாகவும் எனினும் தாமதமாகிவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஈரான் மக்களை அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ளுமாறு அவர் வீடியோ உரையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version