“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இருவர் கைது!

சுமார் ரூ. 10 கோடிக்கும் அதிக மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரு இலங்கைப் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (26.03) அதிகாலை சுங்க அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய நான்கு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பொட்டலங்களில் இருந்து 10 கிலோ 476 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் மொத்த பெறுமதி ரூ. 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் என கணிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய இவர்கள் இருவரும் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version