“கடுமையான பதிலை பெறுவீர்கள்” – ஈரான் எச்சரிக்கை!

ஈரான், தன் அணு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு “கடுமையான விலை செலுத்த வேண்டி வரும்” என்று எச்சரித்துள்ளது.

போரின் 28ஆம் நாளில், யாஸ்த் பகுதியில் உள்ள யூரேனியம் செயலாக்க நிலையம் உள்ளிட்ட பல இடங்களை இஸ்ரேல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சு கசிவோ ஏற்படவில்லை என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புஷேர் அணு மின் நிலையம் அருகிலும் ஒரு ஏவுகணை விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கண்டித்து, கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version