ஸ்மார்ட் டிக்கெட்டிங் முன்னோடி திட்டத்தை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை ரயில்வே திணைக்களம்!

பாரம்பரிய காகித டிக்கெட்டுகளை மாற்றும் வகையில் டிஜிட்டல் டிக்கெட் முறைமையை அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் டிக்கெட்டிங் முன்னோடி திட்டத்தை ஏப்ரலில் ஆரம்பிக்க திட்டமிட்டதுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் முதலில் கெளனி ரயில் பாதையில், நாராஹென்பிட்ட, நுகேகொட, மாகும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

புதிய முறைமையில் நவீன டிக்கெட் சரிபார்ப்பு சாதனங்கள் இடம்பெறும் என்றும், இது பயணிகள் வசதியையும் சேவையின் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னோடி கட்டத்திற்குப் பின்னர், இந்த திட்டம் முழு கெளனி பாதைக்கும் விரிவுபடுத்தப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் உள்ள பிற ரயில் பாதைகளுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும், பயணிகள் நட்பு வசதிகள் சேர்க்கப்பட்டு, இந்த திட்டம் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version