கணேமுல்ல பகுதியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கணேமுல்ல பகுதியில் ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி பரிசோதிக்கப்பட்டபோது அதில் பயணித்த இருவரிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

சோதனையில் 470 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 230 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் பொல்லத்த மற்றும் கணேமுல்லா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துவருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version