இ-சிகரெட் பாதுகாப்பானது அல்ல – புதிய ஆய்வு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட புதிய ஆய்வில், இ-சிகரெட் (vaping) முன்பு கருதப்பட்டபடி பாதுகாப்பான மாற்று வழி அல்ல என எச்சரிக்கபட்டுள்ளது.

2017 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட பல ஆய்வுகளை மதிப்பாய்வு செய்த இந்த ஆய்வில், இ-சிகரெட் பயன்படுத்துவது DNA சேதம், சுவாசக் குழாயில் திசு சேதம், வாயில் உள்ள நுண்ணுயிர் சமநிலையின் மாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள், நுரையீரல் மற்றும் வாய்க் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் காரணமாகும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புகைபிடிப்பதோடு சேர்த்து இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கு அபாயம் அதிகமாக இருப்பதாகவும், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் நான்கு மடங்கு அதிகரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, vaping பற்றிய பொதுவான பாதுகாப்பு எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version