‘அமெரிக்கா-ஈரான் போர் செலவுக்கு அரபு நாடுகள் நிதி வழங்க வேண்டும்’ ட்ரம்ப் விருப்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போரின் மிகப்பெரிய செலவுகளை ஈடு செய்ய அரபு நாடுகளிடம் நிதி பங்களிப்பு கோரலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “அரபு நாடுகள் இந்த போர் செலவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிபர் ட்ரம்ப் ஆர்வம் கொண்டிருக்கிறார்” என தெரிவித்தார்.

இந்த யோசனை, 1990–91 காலப்பகுதியில் நடந்த வளைகுடா போரில் குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு நிதி உதவி வழங்கியதை ஒத்ததாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை எந்த நாடுகளிடமும் அதிகாரப்பூர்வ கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும், இது குறித்து பின்னர் மேலதிக தகவல்கள் வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த போர் காரணமாக அமெரிக்கா ஏற்கனவே பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளதாகவும், செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version