NSL – கொழும்பு எதிர் தம்புள்ளை

கொழும்பு மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையில் கொழும்பில் ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய சுப்பர் லீக் 4 நாள் தொடரின் 2வது போட்டியின் 2 ஆம் நாள் நிறைவு பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி 120 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 408 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் நிஷான் மதுஷ்க 97(197) ஓட்டங்களையும், அஞ்சல பண்டார 95(186) ஓட்டங்களையும், கவிந்து பதிரன 49(113) ஓட்டங்களையும் பெற்றனர்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசுர்ய 3 விக்கெட்களையும், சமோத் பத்தகே, ஜனித்த லியனகே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தனஞ்ஜய லக்ஷன, கசுன் ரஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் கொழும்பு அணி 39 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று 255 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் ரவிந்து ரஸந்த 69(130) ஓட்டங்களையும், தரிந்து அமரசிங்க 52(62) ஓட்டங்களையும் பெற்றனர். தற்போது ஆடுகளத்தில் தனஞ்சய லக்ஷன் 19(42) ஓட்டங்களுடனும், பிரபாத் ஜெயசுர்ய 2(6) ஓட்டங்களுடன் காணப்படுகின்றனர்.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் ஷக்தி உதார 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version