NSL – காலி எதிர் கண்டி

காலி மற்றும் கண்டி அணிகளுக்கிடையில் ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய சுப்பர் லீக் 4 நாள் தொடரின் 1 ஆவது போட்டியின் 2 ஆம் நாள் நிறைவு பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய காலி அணி 80.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஒஷட பெர்னாண்டோ 84(108) ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 70(116) ஓட்டங்களையும் பெற்றனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் சாமிக்க குணசேகர 5 விக்கெட்களையும், துலாஜ் சமுதித 3 விக்கெட்களையும், ஜெப்ரி வன்டெர்செ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் கண்டி அணி 54 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்று 61 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் சம்மு அஷான் 52(89) ஓட்டங்களை பெற்றார். தற்போது ஆடுகளத்தில் சாமிக்க கருணாரத்ன 34(46) ஓட்டங்களுடனும், சாமிக்க குணசேகர 2(10) ஓட்டங்களுடன் காணப்படுகின்றனர்.

காலி அணியின் பந்துவீச்சில் இசித்த விஜேசுந்தர 4 விக்கெட்களையும், அசிங்க மனோஜ் 2 விக்கெட்களையும், ரமேஷ் மெண்டிஸ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version