சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (18.04) IPL இன் 27 ஆவது போட்டியாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது. இதில் அபிஷேக் ஷர்மா 59(22) ஓட்டங்களையும், ஹெயின்ரிக் க்ளாஸன் 59(39) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அன்ஷுல் கம்பொஜ் மற்றும் ஜேமி ஓவெர்ட்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், முகேஷ் செளதரி 2 விக்கெட்களையும், குர்ஜப்னீட் சிங் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இதில் மத்தியூ ஷோர்ட் 34(30) ஓட்டங்களையும், ஆயுஷ் மாத்ரே 30(13) ஓட்டங்களையும், சர்பராஸ் கான் 25(19) ஓட்டங்களையும், ஷிவம் டூபே 21(16) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் எஷான் மாலிங்க 3 விக்கெட்களையும், நிதீஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்களையும், ஷிவாங் குமார், ஷகிப் ஹுசைன், ப்ரபுல் ஹிங்கே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த போட்டியின் நாயகனாக எஷான் மாலிங்க தெரிவு செய்யப்பட்டார்.