டெல்ஃப்ட் தீவுக்கான படகுப் பயணத்தின்போது உயிர் காப்புச் சட்டை அணிய மறுத்து, “எனக்கு நீந்தத் தெரியும் என்பதால்தான் நான் சட்டை அணியவில்லை,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் உயிர் காப்புச் சட்டையை அணிய மறுத்தால் குறித்த பயணம் தாமதமானதாக சக பயணிஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர், வடக்கில் உயிர் காப்புச் சட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதையும், பயணிகளுக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் நோக்கிலேயே தனது செயல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.