பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌதரி வீதி விபத்தில் காலமானார்!

புகழ்பெற்ற தமிழ் தயாரிப்பாளரும் நடிகருமான ஜீவாவின் தந்தை ரத்தன்லால் பகத்ராம் சௌதரி, ராஜஸ்தானின் உதய்பூரில் இன்று (05.05) அன்று நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி தமிழ் திரையுலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி. சௌதரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்ததற்காக அறியப்பட்டவர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில், அவர் 99 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார், அவற்றில் பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், எஸ். எழில், ராஜகுமாரன், சசி மற்றும் ரவி மரியா உட்பட 34க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதன் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனதின் பெயரை உலகறிய செய்திருந்தார்.

Social Share

Leave a Reply