தலவகலை – நுவரெலியா பகுதியில் இன்று காலை (13.05) முதல் தொடர் மழை பெய்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீதிகளில் பயணிப்போர் வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியும் ஓட்டுமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வாகன ஓட்டிகளை வலியுறுத்தி வருகின்றனர்.