கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் நோய் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இதுவரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், மேலும் 65 முதல் 80 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக காய்ச்சல், உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் இருந்து இரத்தப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
‘பண்டிபுக்யோ’ எனப்படும் எபோலா வைரஸ் வகை பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நோய்க்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இல்லாததால், இந்நோயைக் கட்டுப்படுத்துவது ஒரு சவாலாக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
உகாண்டா போன்ற அண்டை நாடுகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதால், சுகாதார அதிகாரிகள் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.