அவசரகாலச் சட்டம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் புயலுக்குப் பிந்தைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 மே 28ம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மின்சாரம், எரிபொருள், வைத்தியசாலை சேவைகள், பொதுப் போக்குவரத்து, நீர் வழங்கல், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் விநியோகம், அரச வங்கிகள், தொலைத்தொடர்பு, உள்ளூராட்சி சேவைகள், விவசாயம் உள்ளிட்ட 15 முக்கிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version