மொனராகல – சியம்பலாண்டுவ பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

மொனராகல – சியம்பலாண்டுவ பிரதான சாலையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (29.05) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்த 26 பயணிகள் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Social Share

Leave a Reply