இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் இன்று (23.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இந்தியா அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் தேவ்தத் படிக்கல் 117(193) ஓட்டங்களை பெற்று அவரது 2 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து தனது 3 ஆம் இடத்தை நிரந்தரமாக கைப்பற்றியுள்ளார். யஷஷ்வி ஜெய்ஸ்வால் 45(53) ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43(83) ஓட்டங்களையும் பெற்றனர். ரிஷர்ப் பண்ட் உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். த்ருவ் ஜுரேல் 7 ஓட்டங்களுடனும், சரண்ஸ் ஜெய்ன் 4 ஓட்டங்களுடனும் மைதானத்தில் காணப்படுகின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், லஹிரு குமார, கேஷர நுவந்த ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
