குறிஞ்சாக்கேணி விவகாரம் – மூவருக்கு பிணை

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்ததில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் பிணையில் செல்ல திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (16/12) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கிண்ணியா பொலிஸார் பாதுகாப்பு இல்லாத நிலையில் படகினை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(திருகோணமலை நிருபர்)

குறிஞ்சாக்கேணி விவகாரம் - மூவருக்கு பிணை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version