கனடாவில் ஒமிக்ரொன் திரிபு தற்பொழுது சமூக பரவலாக மாறியுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் ஜீன் வெஸ் டக்ளொஸ் தெரிவித்துள்ளார்.
புதிய திரிபு பரவல் மற்றும் தீவிரம் காரணமாக கனடா 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடைகளை முன்னராகவே அமுல்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அதுகுறித்து கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் ஜீன் வெஸ், ‘வெளிநாடுகளுக்கு பயணிக்க இது சரியான நேரம் இல்லை. கனடாவில் சமூக பரவலாக ஒமிக்ரொன் தொற்று மாறியுள்ளது. சமூகத்தில் கொரோனா தொற்று யாரிடம் இருந்து, யாருக்கு பரவியது? என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை தான் சமூக பரவல் எனப்படும்.
சமூகப் பரவல் வந்தவிட்டால் கொரோனா பரவல் மிக அதிகமாகிவிடும். இதனிடையே, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதையும் தடுப்பூசி போடுவதையும், சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் சர்வதேச அளவில் மக்கள் அலட்சியமாக இருப்பது என்னை மிகவும் கவலையடைச் செய்துள்ளது. ஒமிக்ரொன் பாதிப்பு சிறியளவில் மாத்திரமே இருக்கும் என பலரும் நினைக்கின்றனர். இது யதார்த்தமான அணுகுமுறை அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.