லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் இருவரும் இன்று (17/12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு சிலிண்டர்களின் கலவையின் தரம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் செய்த முறைப்பாடுகள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு தலைவர் தெஷார ஜயசிங்க மற்றும் லாஃப் எரிவாயு தலைவர் கே.வேகபிட்டிய ஆகியோருக்கு இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரும் இது தொடர்பான விடயம் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
