கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காமினி சுற்றுவட்டம் ஊடாக டார்லி வீதி நோக்கி செல்லும் பகுதியிலும் இப்பன்வில் சந்தியிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
எனவே குறித்த வீதிகளூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
