வவுனியா திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் – விசேட அறிவித்தல்

வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா டெலிகாம், தபால் திணைக்கள ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. நாளைய தினம்(11.09) வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வவுனியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. பின்னர் மீண்டும் 13ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திணைக்கள ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாகும். ஏற்றப்படும் நிலையங்கள் மற்றும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதர திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊசியேற்றப்பபடாத திணைக்கள ஊழியர்கள் வவுனியா சுகாதர திணைக்கள தொற்றியல் பிரிவிற்கு சென்று தங்களுக்கான விண்ணப்பபடிவங்களையும், தடுப்பூசிக்கான நிலையம் மற்றும், ஊசியேற்றும் நாள் போன்ற விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வவுனியா திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் - விசேட அறிவித்தல்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version