இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 28 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்கா அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. இதில் எய்டன் மார்க்ராம் 48(33) ஓட்டங்களையும், ரீஷா ஹென்றிக்ஸ் 38(30) ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 36(32) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் வனிது ஹசரங்க 23/2 என்ற பந்துவீச்சு பெறுதியை பெற்றுக்கொண்டார். துஸ்மாந்த சமீர, தஸூன் சானாக்க, மகேஷ் தீக்ஸன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைபப்ற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. இதில் டினேஷ் சந்திமால் தனது கூடிய ஓட்டங்களான 67 (55) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். சமிக்க கருணாரட்ன 22(14) ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் ப்ஜோன் போர்டியூன், அன்றிச் நோக்கியா, கேஷவ் மஹாராஜ், ரப்டைஸ் ஷம்ஸி, டுவைன் பிரடோரியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் நாயகனாக எய்டன் மார்க்ராம் தெரிவு செய்யப்பட்டார்.