அக்கரப்பத்தனை பிணக்குகளுக்கு சுமுகத் தீர்வு

டயகம மற்றும் அக்கரபத்தனை பிரதேசங்களுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20/12) நேரடியாக விஜயம் மேற்கொண்டு, தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த விஜயத்தின் போது, அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், தொழில் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், தொழிலாளர்கள் எதிர்நோக்கி வந்த சில பிணக்குகள் பேசி தீர்க்கப்பட்டதுடன், எனினும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்காதமையால், தொடர்ந்தும் மக்கள் பணிபகிஷ;கரிப்பில் ஈடுப்பட்டனர். இதன்போது மக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் 3,300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்க வேண்டும் எனவும் தரிசு நிலங்களை இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழிலுக்காக வழங்க வேண்டும் எனவும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனி அதிகாரிகள் இணக்கம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version