நாட்டில் நேற்று (20/12) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனங்கள் ஆகியன இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துகளின் பயணங்களை மேற்கொள்வதற்கு பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என குறித்த சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய ஆக்குறைந்த கட்டணத்தை 25 ரூபாவாக உயர்த்தவேண்டும் என, தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஏனைய கட்டணங்களை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப 20 சதவீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என, அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.