யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் நிறுவனர் சக உரிமையாளர் STR என்ற தியாகராஜா காலமானார்.
தியேட்டர் முதலாளி STR, பழம்பெரும் புகழ் நடிகர் எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகராவார்.அதனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டையும் இவர் கொண்டாடியுள்ளார்.
நாட்டின் பிற தமிழ்ப் பகுதிகளில் தமிழ் சினிமா அரங்குகள் சிலவற்றையும் தம் நிர்வாகத்தின் கீழ் இவர் வைத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இன்று யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியில் தனி தியேட்டர் என்ற வகையில் ராஜா தவிர செல்லா ( முன்பு சாந்தி) தியேட்டர் இருந்தாலும் ராஜாவின் பழைய செல்வாக்கை இன்னும் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.



