கொழும்பு பல்கலைக்கழக சர்ச்சை – ‘நான் கலங்கவில்லை’

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தம்மிடம் இருந்து பட்டதாரி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள மறுத்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் விளக்கமளிக்கையில், கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் செயற்பாடுகளை கண்டு தாம் கலங்கவில்லை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், எத்தனை தடைகள் வந்தாலும், எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் ஒரு நாளும் மேய்வதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் சிலர் பட்டதாரி சான்றிதழ்களை முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்த சம்பவம் சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு பல்கலைக்கழக சர்ச்சை - 'நான் கலங்கவில்லை'

Social Share

Leave a Reply