13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், சமஷ்டி கட்டமைப்பபில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் – முஸ்லிம் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகளிடையே நேற்று (21/12) கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டத்தின் பிரகாரம், சகலரும் முன்வைத்த கோரிக்கைகளை உள்வாங்கி பொது ஆவணத்தின் புதிய வரைபு உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த புதிய வரைபினை, இன்று (22/12) தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களின் கையொப்பம் பெறப்படவுள்ளதாக, தமிழ் பேசும் தரப்பை ஒன்றிணைக்கும் செயற்பாட்டின் ஏற்பாட்டாளரும், டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் குறித்த ஆவணத்தை இலங்கை அரசாங்கத்திடமும், இந்தியா மற்றும் சர்வதேச தரப்பினருக்கும் இடையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.