பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது
குறித்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ விடுத்துள்ளார்.
அதற்கமைய பொருள் கொள்வனவு மற்றும் பண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் போது போலி நாணயத்தாள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.