வவுனியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தொற்றுக்களும், இறப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் நடவடிக்கைள் தொடர்பில் தனது கவலையினை அவர் வெளியிட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் மீது மிகவும் கரிசனை கொண்ட குறித்த வைத்தியர், மக்கள் அசண்டையீனமாக செயற்படுவதாகவும், தேவையற்ற நடமாட்டங்கள், ஒளித்து திருமணங்கள், ஏனைய விழாக்களை செய்பவர்கள் அசண்டையீனமாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
மக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தடுமாறு உரிய அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்துள்ள போதும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறுகின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
“இனியும் நீங்கள் அருகருகே நிற்பதற்கும் சுகாதாரத்துறையை சாட்டாமல் சுய பாதுகாப்பை முன்னிலைப்படுத்துங்கள். ஒரு கட்டத்தில் நாம் மௌனிக்கும்போது உங்கள் தவறுகளுக்கு சாட்டுவதற்கு ஆட்கள் கிடைக்காது! இனி உங்கள் இஷ்டம்! ” என தனது ஆதங்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.