நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு நிலைமைகாரணமாக 5000 பேருந்து ஊழியர்கள் உட்பட 11000 பேருந்து உரிமையாளர்கள் எதவித வருமானமும் இன்றி உள்ளதாகவும் அவர்களுக்குப் பொருத்தமான நிவாரண உதவிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர் தனியார் பேருந்து ஊழியர்களும், உரிமையாளர்களும் தமது குடும்பங்களுக்கான அடிப்படைத்தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், இவ்வாறு அரசாங்கம் தொடர்ச்சியாக தம்மைக் கவனிக்காது இருப்பின் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் நாட்டில் தனியார் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவித்தார்.