றொக்ஸ்ரார் நிகழ்ச்சியில் கமலஹாசன்


தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் தன்னுள் பல திறமைகளை உருவாக்கி தமிழ் சினிமாவில் பல புதிய உத்திகளை புகுத்திவருகின்றார்.
அண்மையில் தமிழக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர் அரசியல் ரீதியாக பலராலும் விமர்சிக்கப்பட்டுவந்தார்.

எனினும், தனது சினிமா வாழ்க்கையை விட்டுவிடாது தற்போது இயக்குநர் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம் ‘ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் தமிழ் சினிமா இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், அடுத்தமாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ள விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பொஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் றொக்ஸ்ரார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் பாடகர்களான ஸ்ரீனிவாஸ் மற்றும் மனோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

றொக்ஸ்ரார் நிகழ்ச்சியில் கமலஹாசன்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version