“காகிதமற்ற பாராளுமன்றம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பாராளுமன்றத்தில் காகித பாவனையை குறைப்பதற்கான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் பலர் தலைமையில் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பிரேரணையின் பிரகாரம், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (22/12) இடம்பெற்றது.
ஏராளமான புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், காகித அடிப்படையிலான பல ஆவணங்கள் மேசையில் குவிந்து கிடப்பதாகவும், இதனால் நாளாந்தம் பாரியளவு சுற்றுச் சூழல் கேடுகள் ஏற்படுவதோடு வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஒரு நாளைக்கு காகிதங்களை பயன்படுத்த 40 அடி உயரமுள்ள 37 மரங்களையாவது வெட்ட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.