பாசையூர் – இறங்குத்துறைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (22/12) விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இதன் போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையை பார்வையிட்டதுடன் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் புதிதாக கடலட்டை பண்ணையை ஆரம்பிக்கவுள்ளவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.