சேதன உரம் கொண்டுவந்த சீன நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை தடுத்து, மக்கள் வங்கி மற்றும் உள்ளூர் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 06 ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இன்று (23/12) தீர்மானித்துள்ளது.
சீனாவின் சீவிங் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட சேதனைப் உரத்தில் தீங்கிளைக்கக்கூடிய பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வரையறுக்கப்பட்ட உர நிறுவனமும் கொமர்ஷல் உர நிறுவனமும் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.
சீன உர நிறுவனத்தின் உள்ளூர் நிறுவனத்திற்கு கடன் கடிதத்திற்கான கட்டணத்தை செலுத்துவதை தடுத்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தடை உத்தரவை நீடித்து உத்தரவிடப்பட்டது.