திருமலையில் வாகன பேரணி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (24/12) திருகோணமலையில் இடம்பெற்றது.

கந்தளாயில் இருந்து ஆரம்பித்து திருகோணமலை நகரை வந்தடைந்த குறித்த பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா,
நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடி எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசிய பொருற்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

அத்துடன், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிப்பீடம் ஏறிய குறித்த அரசாங்கமானது மக்களை ஏமாற்றி வருகிறது, நாட்டினை சுபிட்சமான நாடாக மாற்றுவோம் என்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசானது தற்போது எந்த வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்குமோ என்ற பீதியில் மக்களை தள்ளியிருக்கிறது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(திருகோணமலை நிருபர்)

திருமலையில் வாகன பேரணி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version