நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் மது விற்பனை நிலையங்களை நாளைய தினம் (25/12) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நத்தார் தின பண்டிகையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மதுவரி திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை கொவிட் 19 பரவல் தொடர்பாக பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், அதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.