நடிகர் சிம்பு நீண்ட இடைவெளியின் பின்னர் நடித்து வெளிவரவுள்ளது இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படம்.
அரசியல் கலந்த அக்ஷன் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் யுவன்சங்கர்ராஜாவின் இசையில் நடிகை கல்யாணி நடிகர்களான பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரேம்ஜி நடிப்பில் ஒக்டோபர் மாதம் வெளிவரவிருந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளிவவுள்ளதாக நடிகர் சிம்பு தனது முகநூல் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் ரஜனிகாந்தின் அண்ணாத்தா திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இச் செய்தி சிம்புவின் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
அதுதவிர தற்போது வெளிவரவுள்ள வாடிவாசல், பீஸ்ட், விவேகம் திரைப்படங்களும் தீபாவளியன்று வெளியாகலாம் எனும் கருத்து நிலவிவரும் வேளையில் ஒரு சிலர் சிம்புவின் மாநாடு திரைப்படம் வேறுதிகதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
