வவுனியாவில் நேற்றையதினம் எழுமாறாகவும் தொற்றாளர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைக்கமைய 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறையினர் மக்கள் தம்மைத்தாமே பாதுகாக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளையும், ஊரடங்கு நடைமுறைகளையும் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டெல்டா வைரஸ்