மத்திய மாகாணத்தை நோக்கி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் தனது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நேற்று முன்தினம் (25/12) மாத்தளை மாவட்ட செயலகத்திலும், பிற்பகல் கண்டி மாவட்ட செயலகத்திலும் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், மத தலைவர்கள், தொண்டர் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிற்றுறையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வருகை தந்து தமது கருத்துக்களை பதிவு செய்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் முயற்சியை மக்கள் புரிந்து கொண்டுள்ளமையால் வழங்கப்பட்டுள்ள காலத்திற்கு முன்னர் தமது அறிக்கையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அங்கு வருகை தந்தவர்களிடம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தை நோக்கி 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version