இலங்கைக்கான கடன் வசதி நீடிப்பு

இலங்கைக்கு பங்களாதேஷினால் வழங்கப்பட்ட கடன் வசதியின் முதல் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு, கடன் வசதியை பங்களாதேஷ் புதுப்பிப்பு செய்துள்ளது.

இலங்கையால் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து கடன் வசதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் – இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அதனை தற்சமயம் நீடித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலரினை பங்களாதேஷ் வழங்கியது.

இரண்டாவது தவணை தொகையான 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஓகஸ்ட் மாத இறுதியில் வழங்கப்பட்டது. எஞ்சிய 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இறுதி தவணையாக செப்டம்பர் மாத நடுப்பகுதியில் வழங்கப்பட்டது.

இலங்கை – பங்களாதேஷூக்கு இடையிலான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, கடன் தொகையின் வட்டியாக 2 சதவீதம் அறவிடப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளிலேயே முதன் முறையாக பங்களாதேஷிடம் கடன் பெற்ற நாடு இலங்கை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கைக்கான கடன் வசதி நீடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version