கொள்வனவுக்கான கோரல் முன்வைக்கப்பட்ட தேயிலை தொகை நாட்டுக்கு கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் உர நெருக்கடியை முழுமையாக தீர்க்க கூடியதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27/12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும், நிவாரண அடிப்படையில் உரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 100 கிலோ பசுந்தேயிலைக்கு 40 கிலோ உரம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.