சுற்றாடல் அமைச்சில் காணமால் போன பணம்

வெளிநாட்டு நிதியுதவியுடன் சுற்றாடல் அமைச்சினால் முழுமைப்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பணம் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றாடல் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும், திட்ட செயற்பாடுகளின் பின்னர் எஞ்சிய 96 மில்லியன் ரூபாய் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவ்வாறான விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்ட குறித்த திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அதனை தொடர்ந்து, உடனடியாக விசாரணைகளை நடாத்துமாறு திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சில் காணமால் போன பணம்

Social Share

Leave a Reply